Connect with us

கேப்டன் பதவியால் எனக்கு எந்தவித நெருக்கடியும் வராது..! கொல்கத்தா அணியின் புதிய கேப்டன் ஓபன் டாக்

Featured

கேப்டன் பதவியால் எனக்கு எந்தவித நெருக்கடியும் வராது..! கொல்கத்தா அணியின் புதிய கேப்டன் ஓபன் டாக்

நடப்பாண்டுக்கான (2023) ஐபிஎல் தொடர் நாளை மறுநாள் மார்ச் 31ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள உலக புகழ் பெற்ற கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஐதரபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உள்ளிட்ட 10 சிறப்பான தரமான அணிகள் பங்கேற்கின்றன.

இந்நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் மீளாததால் அவருக்கு பதிலாக நிதிஷ் ராணா அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய கேப்டன் பொறுப்பு குறித்து வெளிப்படையாக பேசிய ராணா கூறுகையில்:

கேப்டன் பொறுப்பு எனக்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த 3 ஆண்டுகளாக அணித் தலைவருக்கான குழுவில் நானும் இருந்துள்ளேன் . இதுவரை கள வியூகம் வகுக்கும் குழுவில் ஒரு பகுதியாக இருந்த நான் இனி கேப்டனாக செயல்படப்போகிறேன்.

கேப்டன் பதவி என்பது ஒரு அடையாளம் அவ்வளவு தான். இதை கூடுதல் நெருக்கடியாக எடுத்துக் கொள்ளமாட்டேன். முதல்தர கிரிக்கெட்டோ அல்லது ஐ.பி.எல். தொடரோ வீரர்களை சரியான நேரத்தில் பயன்படுத்துவது தான் முக்கியம். ஏனெனில் வெவ்வேறு நாடுகளில் இருந்து வரும் வீரர்களை சரியாக ஒருங்கிணைத்து விளையாட வேண்டும்.

இந்த கேப்டன் பொறுப்பில் நான் யாரையும் முன்மாதிரியாக பின்பற்றுவதில் முன்னுரிமை கொடுக்க மாட்டேன். கேப்டன்ஷிப்பில் எனக்குரிய பாணியில் செயல்பட விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார் .

ஐபிஎல் தொடரின் இத்தனை சீசன்களில் கொல்கத்தா அணியில் பல கேப்டன்கள் சில பல காரணங்களுக்காக மாறியுள்ளனர் .அந்தவகையில் நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் புதிய கேப்டனாக செயல்பட உள்ள இளம் வீரர் நிதிஷ் ராணா அணியின் வெற்றிக்காக எண்னென செய்யப்போகிறார் என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மலைகா அரோராவின் 'இடுப்பை' குறி வைத்து வீடியோ... குவியும் கண்டனம்!

More in Featured

To Top