Cinema News
தியேட்டரில் ப்ரெண்ட்ஸ் உடன் பார்க்கலாம் …தி லெஜண்ட் -படம் எப்படி இருக்கு ..?-திரை விமர்சனம்
தி லெஜண்ட், ஜேடி-ஜெரி, இயக்குனர் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய திரையில் சரவணன் அருண் ஹீரோவாக நடித்த தி லெஜெண்ட் படம் வெளியாகி உள்ளது,இந்த படத்தின் விமர்சனம் பின்வருமாறு .
படத்தின் கதை :
வெளிநாட்டில் விஞ்ஞானியாக பணிபுரிந்த சரவணன் அருள் தனது சொந்த கிராமத்திற்கு வருகிறார். தனது நண்பன் ரோபோ சங்கர் மற்றும் அவரது குடும்பம் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டு வேதனை அடைகிறார். விஞ்ஞானியான சரவணன் சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதனை பிடிக்காத சிலர் ஹீரோவின் மனைவியை கடத்தி செல்கின்றனர்.

கடத்தி செல்லப்பட்ட மனைவியை கண்டுபிடிக்கிறாரா? சர்க்கரை நோய்க்கு தீர்வு கிடைக்கிறதா? என்பது தான் தி லெஜன்ட் படத்தின் கதை. சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் முதல் முறையாக ஹீரோவாக தி லெஜன்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஜேடி ஜெர்ரி இயக்கி உள்ளனர். சரவணனுடன் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், ரோபோ சங்கர், ஊர்வசி ரௌடேலா, கீத்திகா திவாரி, யாஷிகா ஆனந்த், ராய் லட்சுமி, யோகி பாபு, பிரபு என பெரிய நடிகர் பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் பலம்
தி லெஜண்டைச் சுற்றியிருக்கும் பரபரப்பானது அதன் முன்னணி நாயகன், தொழில்முனைவோர் சரவணன், திரைப்பட நட்சத்திரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணமாக மட்டுமே. ஒரு ஹீரோவுக்குத் தேவையான அனைத்தையும் சரவணன் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் – சண்டை, காதல், நடனம், பஞ்ச் டயலாக்குகள் (“எனக்கு பதவி முக்கியம் இல்லங்க.. மக்கள் தான் முக்கியும்”) மற்றும் உணர்ச்சிவசப்படுகிறார். துரதிர்ஷ்டவசமாக, அவர் ஒவ்வொரு ஷாட்டிலும் அவர் மேக்கப்பில் இருப்பது செயற்கை ஆக்குகிறது .மறைந்த விவேக் ஒரு சிறந்த இறுதிப் படத்திற்கு தகுதியானவர் என்றாலும் யோகி பாபு நகைச்சுவையாக இல்லை.

படத்தின் பலவீனம்
நாசர், விஜயகுமார், தேவதர்ஷினி, சச்சு மற்றும் தம்பி ராமையா போன்ற மூத்த நடிகர்கள் அதிக சம்பள காசோலையில் பணம் எடுப்பது போல் தோன்றும் போது கீதிகா மற்றும் ஊர்வசி ரவுத்தேலா ஆகியோர் இடம் இல்லாமல் இருக்கிறார்கள். மறைந்த விவேக் ஒரு சிறந்த இறுதிப் படத்திற்கு தகுதியானவர் என்றாலும் யோகி பாபு நகைச்சுவையாக இல்லை.
வில்லன் கதாப்பாத்திரத்தில் சுமன் நடித்துள்ளார். குடும்பம், காதல், சென்டிமென்ட் என முதல் பாதி நகர்கிறது. விஞ்ஞானம், மருந்து, பழி வாங்குதல் என இரண்டாம் பாதி நகர்கிறது. 5 பாடல்கள், 6 சண்டை காட்சி என இந்த வயதிலும் தன் ஒட்டு மொத்த திறமைகளையும் வெளிப்படுத்தியுள்ளார் சரவணன்.
மொத்தத்தில் நண்பர்களுடன் திரையரங்கில் மகிழ்ச்சியாக பார்க்கும் திரைப்படமாக தி லெஜன்ட் உருவாகியுள்ளது.
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
