Connect with us

‘பொன்னியின் செல்வன்’ பட வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை..! அவரே கொடுத்த ஷாக்கிங் தகவல்…

Celebrities

‘பொன்னியின் செல்வன்’ பட வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை..! அவரே கொடுத்த ஷாக்கிங் தகவல்…

உலக புகழ் பெற்ற கல்கி கிருஷ்ணமூர்த்தியின் சிறந்த படைப்பான பொன்னியின் செல்வன் கதைக்களத்தை பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் மூத்த இயக்குனர் மணிரத்தினம். மக்களிடையே தாறுமாறான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் திரையரங்கில் கோலாகலமாக வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், ஜெயராம், பிரபு, ரகுமான், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, நிழல்கள் ரவி, சரத்குமார், ஷோபிதா, பிரகாஷ்ராஜ் உள்பட பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். பிரமாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது.

அண்மையில் கோடா இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பல முன்னணி பிரபலங்களின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நிராகரித்ததாக நடிகை அமலா பால் கூறி இருக்கிறார். பொன்னியின் செல்வனில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அமலா பாலை அணுகி இருக்கிறார் மணிரத்னம். ஆனால் அவர் முடியாது என மறுத்துவிட்டாராம். அது பற்றி தற்போது ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார் அமலா பால்.

பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்த அமலா பால்! அவர் சொன்ன காரணத்தை பாருங்க | Amala Paul Turned Down Ponniyin Selvan Offer

“நான் மணி சாரின் பெரிய ரசிகை. அவருடன் ஒரு ஆடிஷனுக்கு சென்று இருக்கிறேன், ஆனால் அந்த முறை நான் தேர்வாகவில்லை. அதற்கு பிறகு 2021ல் அதே ப்ரொஜெக்ட்டுக்கு என்னை அணுகினார்.”

“ஆனால் அதில் நடிப்பதற்கு மனரீதியாக நான் தயாராகவில்லை , அதனால் முடியாது என சொல்லவிட்டேன். அதற்காக இப்போது வருத்தப்படுகிறேனா என கேட்டால் ‘இல்லை’ என்று தான் சொல்வேன்” என அமலா பால் கூறி இருக்கிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

Advertisement
 

Trending

 
Advertisement
To Top