Connect with us

டூவீலரில் அசத்தும் ஹெல்மெட் அணிந்த நாய்…வைரல் வீடியோ

Featured

டூவீலரில் அசத்தும் ஹெல்மெட் அணிந்த நாய்…வைரல் வீடியோ

சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை ஓட்டுவது, அதிக பாரங்களை லாரிகளில் ஏற்றி வருவது உள்ளிட்ட மற்ற எந்த விதிமீறல்களிலும் பெரிய அளவில் கவனம் செலுத்த மறுக்கும் போக்குவரத்து போலீசார், தலைக்கவச விஷயத்தில் மட்டும் அவ்வப்போது திடீர் கவனம் செலுத்தி வசூல் வேட்டை நடத்துவதாக பரவலான புகார் உள்ளது.

அந்த வகையில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற விதியும் கடுமையாக்கப்பட்டுள்ளது. இந்த விதியால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருசக்கர வாகனத்தின் பின்னால் தனது செல்ல நாயை அமரவைத்து, அதற்கும் ஒரு தலைக்கவசத்தை அணிவித்து அழைத்துச் செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் செல்போனில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர் கழுத்துப்பட்டை பொருத்தாமல் அணிந்திருக்கும் தலைக்கவசமும் சரி, அவரது நாய்க்கு அணிவித்திருக்கும் தலைக்கவசமும் சரி, தரமற்றவை என்பதையும் காண முடிகிறது.

உயிருக்கு பயந்து விதிகளை பின்பற்றாமல், சட்டத்துக்குப் பயந்து கடமைக்காக இதுபோன்ற காரியங்களில் சிலர் ஈடுபடுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Featured

To Top