Connect with us

அபராதம் மேல் அபராதம் போடும் கிரிக்கெட் வாரியம்..புதிய சிக்கலில் சிக்கி தவிக்கும் இலக்கை அணி..!

Featured

அபராதம் மேல் அபராதம் போடும் கிரிக்கெட் வாரியம்..புதிய சிக்கலில் சிக்கி தவிக்கும் இலக்கை அணி..!

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது . இதில் முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 198 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று நடைபெற்றது ஆனால் போட்டி தொடங்குவதற்கு சிலமணி நேரெதிக்ரு முன்பே மழை தொடர்ந்து பெய்ததால் டாஸ் கூட போடப்படாமல் இந்த போட்டி ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையில் ஆக்லாந்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்து வீசி முடிக்காமல் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதாக கூறி இலங்கை அணி அணியினருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 20 சதவீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என கிரிக்கெட் வாரியம் ஸ்ட்ரிக்டாக அறிவித்துள்ளது .

இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹாமில்டனில் வரும் 31 ஆம் தேதி நடைபெற உள்ளது . இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றால் தான் தொடரை இழக்காமல் இருக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் இலங்கை அணி இருக்கிறது.

இந்நிலையில் நாளைமறுநாள் நடைபெறும் கடைசி ஒரு நாள் போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  புது வீட்டிற்கு செல்வதற்குள் பிக்பாஸ் தாமரை வீட்டில் நேர்ந்த சோகம்...

More in Featured

To Top