Connect with us

“தரமான போட்டியா இருக்கும் போல..! இந்த Season Bigg Boss போட்டியாளர்கள் இவர்கள்தானா?!”

Cinema News

“தரமான போட்டியா இருக்கும் போல..! இந்த Season Bigg Boss போட்டியாளர்கள் இவர்கள்தானா?!”

பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில் 7வது சீசன் விரைவில் தொடங்க இருப்பதாகவும், இந்த சீசனில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் கசிந்து கொண்டிருப்பதையும் பார்த்து வருகிறோம்.

ஏற்கனவே இந்த நிகழ்ச்சி குறித்த இரண்டு புரமோக்கள் வெளியானது என்பதும் குறிப்பாக இரண்டாவது புரமோவில் இந்த சீசனில் இரண்டு வீடுகள் என்று கமல்ஹாசன் கூறியது நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பை அதிகரித்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் 18 போட்டியாளர்கள் குறித்த தகவல் கசிந்து உள்ளது. ஏற்கனவே நாம் கூறியவாறு கமல்ஹாசனிடம் கார் பரிசு பெற்ற கோவையை சேர்ந்த பெண் டிரைவர் ஷர்மிலி இந்த நிகழ்ச்சியில் கலந்து உள்ளார். அதனை அடுத்து நடிகர் அப்பாஸ், பிருத்விராஜ் மற்றும் சோனியா அகர்வால் ஆகிய மூவரும் களமிறங்க உள்ளதாக தெரிகிறது.

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை அம்மு அபிராமி, நடிகை தர்ஷா குப்தா மற்றும் நடிகர் சந்தோஷ் பிரதாப் ஆகிய மூவரும் களமிறங்க உள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷகிலாவின் வளர்ப்பு மகள் மிலா என்பவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிகிறது.

மேலும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரக்சன் மற்றும் ஜாக்குலின் ஆகிய இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கடந்த சீசனில் கலந்து கொண்ட ரக்ஷிதாவின் கணவர் தினேஷ் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிகிறது.

மேலும் விஜே பார்வதி, நடிகை ரேகா நாயர், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் ஆகியோர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்த விக்னேஷ் மற்றும் நடன இயக்குனர் ஸ்ரீதர் ஆகியவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக தெரிகிறது.

மொத்தத்தில் இந்த சீசனின் போட்டியாளர்கள் தேர்வு மிக சிறப்பாக அமைந்துள்ளதை அடுத்து செம்ம போட்டி ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தளபதி 68 படத்தின் பூஜை எப்போ தெரியுமா??பூஜை முடிந்தவுடன் இந்த காட்சி தானாம்!

More in Cinema News

To Top