Connect with us

சித் ஸ்ரீராம் பாடியுள்ள ”சைக்கோ” படத்தின் 2-வது பாடல்…!

Cinema News

சித் ஸ்ரீராம் பாடியுள்ள ”சைக்கோ” படத்தின் 2-வது பாடல்…!

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மிஷ்கின் தற்போது சைக்கோ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார். அவருடன் நித்யா மேனன், அதிதி ராவ் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் உன்ன நெனச்சு என்ற முதல் பாடலை வெளியிட்டிருந்த படக்குழுவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் ‘நீங்க முடியுமா’ என்ற 2-வது பாடலை இயக்குநர் கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார்.

கபிலன் எழுதியிருக்கும் இந்தப் பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். பாடலின் வரிகளும் இசையும் காதலைப் பேசி மனதைப் பிழியும் வண்ணம் அமைந்துள்ளன. 2019-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படம் சில காரணங்களால் தள்ளிப் போனது. இதையடுத்து தற்போது ஜனவரி 24-ம் தேதி படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Cinema News

To Top