Bigboss Tamil 5
98 நாள் பிக்பாஸ் வீட்டில் இருந்த தாமரை அக்கா மொத்தம் எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா..? இணையத்தில் கசிந்து வரும் தகவல் இதோ..
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 5வது சீசன் 100 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இறுதி நாள் நிகழ்ச்சி அதாவது வெற்றியாளரை அறிவிக்கும் நாள் எப்போது என இன்று வரை அறிவிக்கப்படவில்லை.
இந்த சீசனில் முக்கிய போட்டியாளராக கருதப்பட்ட தாமரை அக்கா கடந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார், அவர் வெளியேறியது சிலருக்கு ஏமாற்றமாகவே இருந்தது. நடிகர் கமல்ஹாசன் கூட அவர் வெளியேறியது கொஞ்சம் கஷ்டமாக இருப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய தாமரை அக்கா தொடர்ந்து புகைப்படங்கள் வெளியிடுவது, லைவ் வீடியோ வருவது என மிகவும் பிஸியாகவே உள்ளார்.
அனைத்து போட்டியாளர்களுடன் மல்லுக்கட்டி 98 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த தாமரை அக்காவுக்கு ஒரு வாரத்திற்கு 70 ஆயிரம் சம்பளம் என பேசப்பட்டதாம். அதன்படி 14 வாரங்கள் பிக் பாஸ் வீட்டில் தாக்குபிடித்த தாமரைக்கு ரூ. 980,000 லட்சம் சம்பளம் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதிலும் 30 % வரியை பிடித்துவிடுவார்களாம். இச்சூழலில் தாமரை சிபி கேட்டபோதே 12 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறியிருக்கலாமே என சிலர் அவர்களது ஆதங்கத்தை கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
