Connect with us

“வசூல் வேட்டையாடும் LEO! ஒரு வாரத்தில் விஜய்யின் LEO படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?!”

Cinema News

“வசூல் வேட்டையாடும் LEO! ஒரு வாரத்தில் விஜய்யின் LEO படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?!”

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியான திரைப்படம் LEO. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம், பெரும்பான்மையான ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இருப்பினும் வசூலில் வேட்டையாடி வருகிறது. இதனிடையே LEO திரைப்படம் தொடர்பான வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி படம், வெளியாகி 7 நாட்களாகி இருக்கும் நிலையில், இந்த திரைப்படம் 500 கோடி ரூபாய்யை தாண்டி வசூல் செய்து இருக்கிறது.

முன்னணி OTT தளமான நெட்ஃபிளிக்ஸ் LEO படத்தின் டிஜிட்டல் உரிமையைப் பெற்றுள்ளது. திரையரங்குகளுக்குப் பிறகு திரைப்படத்தை ஸ்ட்ரீம் செய்வதற்கான உரிமையை மேடை பெற்றது. நவம்பர் 4 ஆவது வாரத்தில் LEO திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

நவம்பர் 21 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் OTT தளத்தில் LEO திரைப்படம் ஸ்ட்ரீமிங்கிற்கு கிடைக்கும் என வதந்திகள் பரவி வருகின்றன. இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் அதிக அளவில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், LEO OTT வெளியீடு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "4 பெண் இயக்குனர்களின் 'கள்ளிப்பாலில் ஒரு டீ' ஆந்தாலஜி படத்தின் ட்ரைலர் வெளியானது!"

More in Cinema News

To Top