Connect with us

அடுத்தடுத்து நடந்த பிரச்சனை…திடீரென நிறுத்தப்பட்டதா தளபதி 66 பட ஷூட்டிங்

Cinema News

அடுத்தடுத்து நடந்த பிரச்சனை…திடீரென நிறுத்தப்பட்டதா தளபதி 66 பட ஷூட்டிங்

தளபதி விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 66’ படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் ஜூன் 22-ம் தேதி மாஸ் ஹீரோ விஜய்யின் பிறந்தநாளில் வெளியாகும் என பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், ‘தளபதி 66’ படத்தின் இயக்குனர் வம்ஷி பைடிபல்லி மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு தெலுங்கு இண்டஸ்ட்ரியை சேர்ந்தவர்கள் என்பதால், டோலிவுட் மீடியாக்களும் கோலிவுட் சகாக்களை போலவே இந்த திட்டத்தில் ஆர்வமாக உள்ளனர்.

‘தளபதி 66’ படத்திற்கு தமிழில் ‘வாரிசு’ என்றும் ஆங்கிலத்தில் “Heir” என்றும் ,தெலுங்கில் வரசுடு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக டோலிவுட் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இப்படம் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை கொண்ட குடும்ப அடிப்படையிலான பொழுதுபோக்கு திரைப்படம் என்பது ஏற்கனவே தெரியவந்துள்ளது. தலைப்பு பொருத்தமாக இருப்பதாகத் தெரிகிறது, ஆனால் அதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த 22 ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும். இந்நிலையில் இப்படம் பற்றிய முக்கியத் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

Rashmika Mandanna is the heroine of the movie "Thalapathy 66" starring Vijay

அதாவது ஐதராபாத்தில் நடந்துவந்த இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது சென்னையில் நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி சென்னை கிழக்குக் கடற்கரை சாலை பகுதியில் செட் போட்டு படப்படிப்பு நடந்துவந்தது. இதனிடையே இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சிலரால் லீக் ஆகின. இதனால் படக்குழு கடும் அப்செட் ஆனது. ஆனால் புகைப்படங்கள் தொடர்ந்து லீக் ஆகிக் கொண்டே இருப்பதால் படப்பிடிப்பையே தற்போது நிறுத்தியுள்ளதாம் படக்குழு. ஆம், தற்காலிகமாக படப்பிடிப்பை நிறுத்தியுள்ள படக்குழு வேறு இடத்துக்கு படப்பிடிப்பை மாற்றவுள்ளதாம்.

Thalapathy Vijay Meets CM KCR - Movie News

செட் மாற்றம் செய்ய சில தினங்கள் ஆகலாம் எனும் காரணத்தால் அடுத்த சில நாட்களுக்குப் படப்பிடிப்பு ஏதும் நடக்காது எனவும் கூறப்படுகிறது. அடுத்ததாக போகவுள்ள புதிய இடத்திலிருந்தும் போட்டோக்கள் லீக் ஆகாமல் இருக்க, பல்வேறு கட்டுப்பாடுகளை படக்குழு விதிக்கவுள்ளதாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "அடுத்ததாக பாங்காக் செல்லும் கங்குவா படக்குழு! சூர்யாவுடன் மோதும் அனிமல் பட வில்லன்!"

More in Cinema News

To Top