Connect with us

”தளபதி 66” படத்தின் கதை இப்படி தான் இருக்கும்…!இயக்குனர் வம்ஷி கொடுத்த சூப்பர் அப்டேட்

Cinema News

”தளபதி 66” படத்தின் கதை இப்படி தான் இருக்கும்…!இயக்குனர் வம்ஷி கொடுத்த சூப்பர் அப்டேட்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் தனது அடுத்த புதிய படமான ‘பீஸ்ட்’ படத்திற்காக இடைவிடாமல் ஷூட்டிங் நடத்தி வருகிறார்.விஜய் தனது ‘தளபதி 66’ படத்தை இயக்குனர் வம்ஷி பைடிப்பள்ளி இயக்கி, தில் ராஜு தயாரிப்பார் என்று குறிப்பிட்டு இருந்தார்.இந்நிலையில் தற்போது சற்றும் எதிர்பார்க்காத நிலையில் தளபதி 66 படத்தின் அறிவிப்பு வெளியாகி உலகளவில் ட்ரெண்ட் ஆனது .

அதன்படி நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தளபதி 66 படம் தயாராகவுள்ளது.இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குனர் வம்சி வெளியிட்டு இருந்தார்.அடுத்தடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க படக்குழுவோ படப்பிடிப்பில் செம பிஸியாக உள்ளனர்.

அந்த புதிய படத்தை தில் ராஜு தயாரிக்க இருக்கிறார், அந்த அதிகாரப்பூர்வ தகவலும் அண்மையில் வெளியானது.இந்நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் இயக்குனர் வம்சி இருவரும் இன்று திருப்பதியில் தரிசனம் முடித்து திரும்பும் வேளையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இயக்குனர் வம்சி தெரிவித்தது ஆவது , “அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பும் வகையிலான ஒரு கதைக்களத்தை தளபதி விஜய் அவர்களுக்காக எழுதி உள்ளதாகவும் ,தளபதி விஜய் அவர்களுக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது எனவும் தெரிவித்து இருந்தார் . மேலும் தளபதி விஜய்யுடன் முதல் முறையாக பணியாற்றவுள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.இப்போதைக்கு படம் குறித்த அறிவிப்பை மட்டும் தான் வெளியிட்டிருக்கிறோம் வரும் நாட்களில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என தளபதி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

More in Cinema News

To Top