Connect with us

“Poster அடி.. அண்ணன் Ready!! அடுத்தடுத்த வரவிருக்கும் Leo போஸ்டர்கள்! இன்னைக்கு என்ன Poster?!”

Cinema News

“Poster அடி.. அண்ணன் Ready!! அடுத்தடுத்த வரவிருக்கும் Leo போஸ்டர்கள்! இன்னைக்கு என்ன Poster?!”

விஜய் அடுத்தடுத்த படங்களை சமமான இடைவெளிகளில் கொடுத்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதத்தில் பொங்கலையொட்டி அவரது வாரிசு படம் வெளியானது. குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து, வசூலிலும் சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். விஜய்யுடன் த்ரிஷா 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தில் ஜோடியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் மிஷ்கின், கவுதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த் ஆகியோர் இணைந்துள்ள லியோ படத்தின் மூலம் இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளார் லோகேஷ். முன்னதாக இவர்களது கூட்டணியில் வெளியான மாஸ்டர் படமும் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றுள்ள நிலையில், தற்போது இந்தக் கூட்டணி ரசிகர்களிடையே அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. லியோ படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகும் என்று நேற்று முன்தினம் சைமா விருது வழங்கும் விழாவில் கலந்துக் கொண்ட லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.

அதற்கேற்றாற்போல நேற்றைய தினம் படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியாகி மாஸ் காட்டியுள்ளது. இந்தப் படம் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாகவுள்ள நிலையில், அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ், தெலுங்கில் படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ள நிலையில், அடுத்தடுத்து மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியிலும் படத்தின் போஸ்டர்கள் தொடர்ந்து வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் இளைஞர் மற்றும் வயதான லுக்கில் விஜய் நடித்துள்ள நிலையில், நேற்றைய தினம் வயதான கேரக்டரின் போஸ்டர் வெளியாகியுள்ளத. இதில் காஷ்மீர் பேக்கிரவுண்டில் விஜய் ஓடி வருவது போலவும் காணப்பட்டது.

இந்நிலையில், இன்றைய தினம் விஜய்யின் இளைஞர் லுக்கின் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்தின் இரண்டாவது சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளதாக கடந்த வாரத்தில் ஜவான் பட ரிலீசின்போது படத்தின் இசையமைப்பாளர் அனிருத் அறிவித்திருந்தார். அந்த வகையில் இன்னும் சில தினங்களில் படத்தின் இரண்டாவது சிங்கிளும் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் பாடல் விஜய் -த்ரிஷாவின் ரொமாண்டிக் பாடலாக அமைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வருண் தவானுடன் ஆட்டோவில் சிக்கி கொண்ட கீர்த்தி சுரேஷ்…வைரலாகும் வீடியோ!

More in Cinema News

To Top