Connect with us

“தளபதி 67ன் மிரட்டலான Promo ‘LEO’ Bloody Sweet! “

Cinema News

“தளபதி 67ன் மிரட்டலான Promo ‘LEO’ Bloody Sweet! “

நடிகர் விஜய் நடிப்பில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் தளபதி 67 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள புதிய படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்க உள்ளது.

ராக்ஸ்டார் அனிருத், தளபதி 67 படத்திற்காக நான்காவது முறையாக தளபதி விஜய்யுடன் கைகோர்த்துள்ளார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள்.

இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர். நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார்.

நேற்று முன்தினம் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகை த்ரிஷா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தளபதி 67 பூஜை வீடியோ வந்திருந்தது. அதை தொடர்ந்து தற்போது தளபதி 67 படத்தை சன் டிவி satellite உரிமம் பெற்றுள்ளது. இப்போது தளபதி 67 படத்திற்கான டிஜிட்டல் ரைட்ஸை Netflix நிறுவனம் பெற்றுள்ளது.

இதை தொடர்ந்து படத்தின் title இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது 12:30 மணிக்கு அறிவுப்பு ஒன்று வந்துள்ளது அதில் காஷ்மீர் schedule வீடியோ வெளிவந்துள்ளது. இப்பொழுது மாலை 5 மணியளவில் Promo Video வெளிவந்துள்ளது. அதில் படத்தின் பெயர் LEO என தெரியவந்துள்ளது.படம் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது படத்தின் மிரட்டலான புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. வீடியோவில் படத்துக்கு லியோ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. வழக்கம்போல இந்த முறையும் அனைவரது கணிப்பையும் இயக்குநர் லோகேஷ் பொய்யாக்கியிருக்கிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரிங்கு சிங் தடாலடி ஆட்டம் : ஆஸ்திரேலியாவுக்கு 175 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இந்திய அணி..!!

More in Cinema News

To Top