வெறித்தனமான அப்டேட்டை வெளியிட்ட பிகில் படக்குழு!!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…

0
522

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தினை அட்லீ இயக்கியுள்ளார். இதில் நயன்தாரா, கதிர் மற்றும் இந்துஜா என பலர் நடித்துள்ளனர். கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவான இந்த படத்தில் தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அப்பா மற்றும் மகன் வேடத்தில். இதில் அப்பா கதாபாத்திரத்தின் பெயர் தான் ராயப்பன். மற்றும் மகன் கதாபாத்திரத்தின் பெயர் மைக்கேல் என தகவல்கள் வந்துள்ளன.

இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் படக்குழுவிடம் கேட்டகத்தை நாளே இல்லை. இறுதியில் ஒருவழியாக தயாரிப்பாளர் இதற்க்கு செவி செய்துள்ளார். இந்த படத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே தளபதி விஜய் பாடல் ஒன்றினை பாடியுள்ளார். “வெறித்தனம்” என்பது தான் அந்த பாடல். கிட்டத்தட்ட 2 வருடங்கள் கழித்து தளபதி விஜய் படத்தில் பாடுவது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதற்க்கு முன் பைரவா படத்தில் பாப்பா பாப்பா என்ற பாடலை விஜய் படி இருந்தது குறிப்பிடத்தக்கது.