Connect with us

தளபதி 67 படத்திலிருந்து வெளியான அதிரடி அறிவிப்பு…ரசிகர்கள் செம குஷி

Cinema News

தளபதி 67 படத்திலிருந்து வெளியான அதிரடி அறிவிப்பு…ரசிகர்கள் செம குஷி

விக்ரம் 3, கைதி 2, தளபதி 67 என லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள படங்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. இவற்றில் லோகேஷ் கனகராஜ் எதை முதலில் இயக்க போகிறார் என்ற ஆர்வம் அனைவரிடமும் ஏற்பட்டது. தான் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை தான் இயக்க போவதாக லோகேஷ் சமீபத்தில் அறிவித்தார்.விஜய் தற்போது வம்சி பைடபள்ளி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வந்தாலும், ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்னவோ தளபதி 67 படம் பற்றிய அறிவிப்பு மற்றும் அப்டேட் தான். இது எப்போது வரும், என்ன பிளான் வைத்துள்ளார்கள் என ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்னகுமார் ஆகிய இருவரும் இணைந்த செல்பி புகைப்படம் ரத்னகுமாரின் டுவிட்டர் பக்கத்தில் பதிவாகியுள்ளது. அதில் 1 முதல் 10 வரையிலான எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 6,7 என்ற எண்களுக்கு பதிலாக பட்டாசு வெடிக்கும் எமோஜி பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ‘தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு தீபாவளி முதல் தொடங்கும் அல்லது ’தளபதி 67’ படத்தின் ரிலீஸ் தேதி அடுத்த ஆண்டு தீபாவளி என்பதை மறைமுகமாக ரத்னகுமார் பதிவு செய்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top