Connect with us

‘தளபதி 66’ படக்குழுவினர் சென்ற முதல் விசிட் இந்த இடத்துடலையே..?எந்த இடம் தெரியுமா..?

Cinema News

‘தளபதி 66’ படக்குழுவினர் சென்ற முதல் விசிட் இந்த இடத்துடலையே..?எந்த இடம் தெரியுமா..?

தளபதி விஜய் சமீபத்தில் வெளியான ‘மாஸ்டர்’ படம் லாக்டவுனுக்கு பிறகு அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனை படைத்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இந்த படம் கோவிட் 19 தொற்றால் ஐம்பது சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி என்ற போதிலும் வெற்றி பெற்றது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் தனது அடுத்த புதிய படமான ‘பீஸ்ட்’ படத்திற்காக இடைவிடாமல் ஷூட்டிங் நடத்தி வருகிறார்.விஜய் தனது ‘தளபதி 66’ படத்தை இயக்குனர் வம்ஷி பைடிப்பள்ளி இயக்கி, தில் ராஜு தயாரிப்பார் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது சற்றும் எதிர்பார்க்காத நிலையில் தளபதி 66 படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தளபதி 66 படம் தயாராகவுள்ளது.

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குனர் வம்சி வெளியிட்டுள்ளார்.அடுத்தடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க படக்குழுவோ படப்பிடிப்பில் செம பிஸியாக உள்ளனர்.

அந்த புதிய படத்தை தில் ராஜு தயாரிக்க இருக்கிறார், அந்த அதிகாரப்பூர்வ தகவலும் அண்மையில் வெளியானது.

அறிவிப்பு வெளியான சந்தோஷத்தில் விஜய்யின் 66வது பட இயக்குனர் வம்சி மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு இருவரும் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளனர்.

More in Cinema News

To Top