தளபதி 65 படத்திலிருந்து வெளியான ரீசென்ட் போட்டோஸ் கிளிக்…செம வைரல்

0
28

தளபதி விஜய் கடந்த சில நாட்களாக ஜார்ஜியா அமெரிக்காவில் தனது புதிய திரைப்படமான ‘தளபதி 65’ படப்பிடிப்பில் தீவிரமாக உள்ளார், மேலும் முக்கிய பகுதிகள் பதிவு செய்யப்படும் போது குறைந்தது பதினைந்து நாட்கள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாஸ் ஹீரோ தமிழ்நாட்டைப் போலவே, நாட்டின் பிற பகுதிகளிலும் மற்ற நாடுகளிலும் பெரும் ரசிகர்களை கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் அந்த பகுதியைச் சுற்றியுள்ளவர்கள் அவரைப் பார்க்க ஆர்வமாக உள்ளனர் என்பதை தனியாக சொல்ல தேவையில்லை.

அண்மையில் கூட சன் பிக்ச்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் படம் குறித்த முக்கியமான அப்டேட் வெளியிட்டு,ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை பகிர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தற்போது விஜய்யின் கெட்டப் உடன் கூடிய இன்னொரு புகைப்படம் இணையத்தில் . சர்க்கார் படத்தில் இருந்தது போலவே தாடியும் வித்தியாசமான ஹேர் ஸ்டைலும் கொண்ட விஜய்யின் இந்த புகைப்படம் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது. மேலும் இந்த படத்தில் விஜய் ஒரு அகதியாக நடிக்கவுள்ளதாகவும் உறுதிப்படாத செய்திகள் கசிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றுமொரு முக்கிய கேரக்டரில் அபர்ணா தாஸ் நடிக்கும் இந்த படத்தில் விடிவி கணேஷ் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.