Connect with us

“லால் சலாம் படத்துக்காக தலைவர் ரஜினிகாந்த் பேசிய Dubbing Video! வைரல்!”

Cinema News

“லால் சலாம் படத்துக்காக தலைவர் ரஜினிகாந்த் பேசிய Dubbing Video! வைரல்!”

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தனுஷ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும் வசூல் ரீதியாக சரியாக போகவில்லை. இதனையடுத்து வை ராஜா வை படத்தை இயக்கினார். கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படமும் சரியான வரவேற்பைப் பெறவில்லை.

அதேசமயம் மேக்கிங்கில் முதிர்ச்சியடைந்திருதார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிதாக லால் சலாம் என்ற படத்தை இயக்கிவருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். AR ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். லால் சலாம் படத்தின் ஹைலைட்டாக ரஜினிகாந்த் இருக்கிறார்.

லால் சலாமில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடிக்கிறார். மும்பையில் அவர் தாதாவாக இருப்பார் என்றும் விஷ்ணு விஷாலையும், விக்ராந்த்தையும் ஒரு பிரச்னையில் இருந்து அவர் காப்பாற்றுவது போலவும் காட்சிகள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் படத்தில் கபில்தேவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படம் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது.

மும்பை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்த ஷூட்டிங் அண்மையில் முடிவடைந்தது. சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மெகா ஹிட்டானது. எனவே அதே வைபோடு லால் சலாம் படமும் ஹிட்டாகும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். ஷூட்டிங் முடிந்ததை அடுத்து இறுதிக்கட்ட பணிகளை ஐஸ்வர்யா தொடங்கியிருக்கிறார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் லால் சலாம் படத்துக்கான தனது டப்பிங் பணியை முடித்திருக்கிறார். அதுதொடர்பான வீடியோவை லைகா நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அந்த வீடியோவில் டப்பிங் ஸ்டூடியோவுக்கு ரஜினிகாந்த், “மதத்தையும், நம்பிக்கையையும் மனசுக்குள்ள வை; மனிதநேயத்த மேலே வை; அதுதான் நம் நாட்டோட அடையாளம்” என படத்தில் இடம்பெற்றிருக்கும் வசனத்தை பேசும் காட்சி இடம்பெற்றிருக்கிறது. இந்த வீடியோ இணையத்தில் தற்போது ட்ரெண்டாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "மார்க் ஆண்டனி படம் இதுவரை செய்துள்ள வசூல் விவரம்.. வெறித்தனமான சம்பவம்"

More in Cinema News

To Top