Connect with us

Breaking : தலைவர் 169 படத்தின் மாஸான டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது … தரமான சம்பவம் இருக்கு

Cinema News

Breaking : தலைவர் 169 படத்தின் மாஸான டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது … தரமான சம்பவம் இருக்கு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் திலீப்குமாரின் எதிர்பாராத காம்போவைக் கொண்ட ‘தலைவர் 169’ திரைப்படம் சமூக ஊடகங்களில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் வரவிருக்கும் படம் என்றால் அதுதான். ‘பீஸ்ட் ‘ எஃபெக்ட் இந்த திட்டத்தில் பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது,

Image

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டார் புகைப்படம் ஒன்றை நேற்று வெளியிட்டு காலை 11 மணிக்கு புதிய அப்டேட் ஒன்று வெளியாகும் என குறிப்பிட்டுள்ளது. ட்விஸ்ட் வைத்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது எந்த படத்தின் அப்டேட் என்று தெரியாமல் குழம்பி வந்தனர்.இந்நிலையில் தற்பொழுது தலைவர் 169 படத்திற்கு ஜெயிலர் என டைட்டில் வைத்து உள்ளனர்.படக்குழுவினர் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டறில் தொங்கி கொண்டிருக்கு ம் ஒரு அருவாவில் ரத்தம் சொட்ட சொட்ட உள்ளது.படம் முழுக்க சண்டை காட்சிகள் நிறைந்ததாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .

Image

இந்த (ஜெயிலர் ) தலைவர் 169’ படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள் மோகன் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர், சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் தோன்றுகிறார். ஜூலை மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top