Connect with us

உலகம் சுற்றும் தல அஜித்தின் #Tourdiaries பிக்ஸ்…வைரலாகும் போட்டோஸ்

Cinema News

உலகம் சுற்றும் தல அஜித்தின் #Tourdiaries பிக்ஸ்…வைரலாகும் போட்டோஸ்

தல அஜித் நடிக்கும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. 2022-ம் ஆண்டு பொங்கல் விருந்தாக பிரமாண்டமாக ரசிகர்களுக்கு கொண்டு வர தயாராக உள்ளது. எச்.வினோத் இயக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் யோகி பாபு ,புகழ் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர் .இதற்கிடையில் தல அஜித் தனது ஓய்வு நேரத்தை பயன்படுத்தி தனது பைக்கில் உலகம் முழுவதும் செல்லும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார், மேலும் தல சோசியல் மீடியாவில் இல்லாமல் போனாலும் அவரது ரீசென்ட் போட்டோஸ் அனைத்தும் வைரலாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு அஜித் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் BSF வீரர்களுடன் காணப்பட்டார், அதன் போட்டோஸ் ஒரு சில நொடியில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜீத் தனது பிரம்மாண்டமான பிஎம்டபிள்யூ பைக்கின் நிழலில் குளிர்ச்சியாக இருப்பது போன்ற சமீபத்திய புகைப்படம் உள்ளது. ராஜஸ்தானின் தார் பாலைவனத்தில் ஒரு கடினமான சவாரிக்குப் பிறகு அவர் ஓய்வெடுக்க்கும் போட்டோஸ் , இவை அனைத்தையும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பகிர்ந்து வருகின்றனர்.

அஜீத் தனது பைக் பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பியதும், தனது அடுத்த படமான ‘தல 61’ படப்பிடிப்பை உடனடியாக தொடங்குவார், இது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உள்ளது.

More in Cinema News

To Top