இந்தியாவின் இஸ்ரோவை பாராட்டிய பாகிஸ்தான் வீராங்கணை!

0
49

இந்தியாவின் நீண்ட நாள் கனவான சந்திராயன் -2 விண்வெளியில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.சந்திராயன் -2 விண்கலம் ஒவ்வொரு திட்டமும் வெற்றிகரமாக முடிந்தது.ஆனால் நிலவின் தென் துருவத்தில் ஆர்பிட்டரை களமிறக்கும் திட்டம் மட்டும் தான் சிறிது சறுக்கலில் முடிந்தது.அதாவது நிலவில் இருந்து சரியாக 2.5 கிலோமீட்டர் தூரத்தில் அதன் சிக்னல் கிடைக்காமல் போனது.நாடு முழுவதும் இதனை எதிர்பார்த்து இருந்தவர்கள் இடையேபெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரோவின் இந்த முயற்சிக்கு பல தரப்பு மக்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில்,பாகிஸ்தானின் முதல் விண்வெளி வீராங்கனையான  நமீரா சலிம் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கராச்சியில் அளித்த பேட்டியில்,இந்தியாவின் இந்த முயற்சி தெற்காசிய நாடுகளுக்கு மிகப்பெரிய ஒரு வாய்ப்பை உருவாக்கி தந்துள்ளது.இது இந்த மண்டலத்துக்கும் மட்டுமல்லாது சர்வதேச விண்வெளித்துறைக்கு பெருமை சேர்க்கிறது.  விண்வெளியில் அரசியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் ஒன்றுதான் என்று  இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here