மின்னஞ்சல் பாஸ்வேர்டு ஹேக் செய்யப்பட்டிருப்பதை கண்டறிவது எப்படி தெரியுமா???

0
159

உலகம் முழுக்க தகவல் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வரும் ஒன்றாகி விட்டது. சமீபத்தில் வெளியான தகவல்களில் 200 கோடி மின்னஞ்சல்கள் மற்றும் பாஸ்வேர்டுகள் களவாடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இவற்றில் வெறும் 70 கோடி மின்னஞ்சல்கள் மட்டுமே தனித்துவம் வாய்ந்ததாக கண்டறியப்பட்டது. எனினும், இது மிகப்பெரும் தகவல்
திருட்டு சம்பவமாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் உங்களது தகவல்கள் களவாடப்பட்டு இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல்கள் HIBP (Have I Been Pwned) வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில் நீங்களும் உங்களது மின்னஞ்சல் விவரங்கள் ஹேக் செய்யப்பட்டிருப்பதை இந்த வலைதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இதற்கு https://haveibeenpwned.com வலைதளம் சென்று உங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவிட்டு தெரிந்து கொள்ளலாம். இதேபோன்று பாஸ்வேர்டு விவரங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதை அறிந்து கொள்ள https://haveibeenpwned.com/Passwords வலைதளத்தை பயன்படுத்தலாம். மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையின் படி உங்களது மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வேர்டு வெளியாகி இருப்பதை அறிந்து கொண்டதும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம்.

பின்பற்ற வேண்டிய விதிமுறை

உடனடியாக பாஸ்வேர்டுகளை மாற்ற வேண்டும். – டு-ஃபேக்டர் ஆத்தென்டிகேஷன் வசதியை அனைத்து சேவைகளிலும் செயல்படுத்த வேண்டும். – குறிப்பிட்ட மின்னஞ்சல்
முகவரியில் நீங்கள் வழங்கியிருந்த அனுமதிகளை திரும்ப பெற வேண்டும்.

பாஸ்வேர்டு நீங்கள் பயன்படுத்தும் அனைத்து சேவைகளுக்கும் வெவ்வேறு பாஸ்வேர்டுகளை பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்.

சில சேவைகளில் மின்னஞ்சல் முகவரி ஒன்றாக இருந்தாலும் இவ்வாறு செய்ய வேண்டும். வெவ்வேறு சேவைகளுக்கென தனித்தனி பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்ல பழக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here