மாஸ் ஆக வருகிறது மோட்டோ ஜி7 சீரிஸ் மாடல் ஸ்மார்ட் போன்கள்!!!

0
158

மோட்டோரோலா நிறுவனம் அடுத்து தனது புதிய ஸ்மார்ட்போன்களை விரைவில் விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது.இந்த ஸ்மார்ட்போன் சீரிஸில் மோட்டோ ஜி7, மோட்டோ ஜி7 பிளஸ், மோட்டோ ஜி7 பிளே மற்றும் மோட்டோ ஜி7 பவர் என்று நான்கு விதமான மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  பிப்ரவரி மாதவாக்கில்  இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

மோட்டோ ஜி7 மற்றும் மோட்டோ ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் வாட்டர் டிராப் நாட்ச் இடம்பெறும் என்றும், மோட்டோ ஜி7 பிளே மற்றும் மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன்களில் வழக்கமான நாட்ச் டிஸ்ப்ளே இடம்பெறும் என்றும் தெரிகிறது.அதேபோல மோட்டோ ஜி7 மற்றும் ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் டூயல் பிரைமரி கேமரா செட்டப் இடம்பெறும் என்றும், மோட்டோ ஜி7 பிளே மற்றும் மோட்டோ ஜி7 பவர் ஆகிய ஸ்மார்ட்போன்களில் சிங்கிள் பிரைமரி கேமரா இடம்பெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


மோட்டோ ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி என்று இரண்டு விதமான வெர்ஷன்களில் கிடைக்கும். மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர், 4 ஜிபி ரேம் வழங்கப்படும் என்றும், மோட்டோ ஜி7 பிளே ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், 2820 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.பிராசஸர் மற்றும் ரேம் வகைகளை பொறுத்தவரை மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி என்று இரண்டு விதமான வெர்ஷன்களில் கிடைக்கும். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here