உங்கள் எண்ணங்களுக்கு ஏற்றவாறு இனி பேஸ்புக் செயல்படும்—புதிய வசதி அறிமுகம்..

0
148

ஃபேஸ்புக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புது புது வசதியை அறிமுகம் செய்துவருகிறது.சில மாதங்களுக்குமுன் ‘வாட்ச் வீடியோ டூகெதர்’ எனும் வசதியை அறிமுகம் செய்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது புதிதாக ஃபேஸ்புக் நிறுவனம் வாடிக்கையாளர்கள் எண்ணங்களுக்கு ஏற்றவாறு அவர்களின் ஃபேஸ்புக் கணக்கு செயல்படும் வகையில் புதிய வசதியை உருவாக்க இருக்கிறது.

இது பயன்பாட்டிற்கு வரும்போது, வாடிக்கையாளரகள் தங்களின் ஃபேஸ்புக் கணக்குகளை இயக்குவதற்கு கைகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.மாறாக அவர்களின் எண்ணோட்டம் எப்படி இருக்கிறதோ, அவர்கள் என்ன செய்ய வேண்டுமென நினைக்கிறார்களோ அதன் அடிப்படையில் அவர்களின் கணக்கு செயல்படும்.இந்த வசதி எப்போது செயல்பாட்டிற்கு வருமென தெளிவாக ஃபேஸ்புக் நிறுவனம் குறிப்பிடவில்லை. ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சி வேகத்தில் இந்த வசதி விரைவில் வருமென எதிர்பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here