பிரேக்கிங் நியுஸ்: சந்திரயான்-2 பற்றி புதிய தகவல்!

0
56

நிலவின் தென்துருவத்தை ஆராய இஸ்ரோ விஞ்ஞானிகளால் சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. அந்த விண்கலத்தில் இருந்து ஆர்பிட்டர் பகுதி நிலவின் சுற்றுப் பாதைக்கு செலுத்தப்பட்டது. ஆர்பிட்டாலில் இருந்து விக்ரம் என்னும் பெயரிடப்பட்ட லேண்டர் பகுதி நிலவை நோக்கி தரையிறக்கப்பட்டது.  அப்போது நிலவின் தரைப்பகுதிக்கு 2.1 கிலோ மீட்டர் தூரம் இருக்கையில் லேண்டர் உடனான தகவல் துண்டிக்கப்பட்டி துண்டிக்கப்பட்டது

பின்னர், ஆர்பிட்டர் பகுதி நிலவை சுற்றி வந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் என இஸ்ரோ தெரிவித்தது. மேலும், விரைவில் ஆர்பிட்டர் மூலம் லேண்டர் உடன் மீண்டும் தகவல் தொடர்பு ஏற்படுத்தப்படும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அண்மையில் ஆர்பிட்டர் மூலம் லேண்டர் இருக்குமிடம் அறியப்பட்டது என தகவல் வெளியானது. தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக இஸ்ரோ ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் கூறுகையில், ‘விக்ரம்லேண்டர் முழுமையாக சேதமடையவில்லை..லேண்டர் முழுமையாக உள்ளது எனவும், ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தினை பற்றிய தகவல் வெளியானது எனவும், விரைவில் இது குறித்து, அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

இந்த விக்ரம் லேண்டரை கண்டறிந்து அதன் மூலம் சிக்னல் பெற, நிலவை அதன் தரைப்பகுதியில் இருந்து 100 கிமீ தொலைவில் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வரும் ஆர்பிட்டரை 50 கிமீஆக தொலைவில் சுற்ற வைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here