WWW வேர்ல்ட் வைட் வெப்புக்கு இன்று பிறந்தநாள்– சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகிள்.

0
220

இணையத்தின் மிக முக்கியமான அம்சமாக W3 எனப்படும் WWW வேர்ல்ட் வைட் வெப் இருக்கிறது. எளிமையாக கூற வேண்டும் என்றால், இணையம் உடல் என்றால் W3 கண் போன்றது.உலகத்தின் எந்த பகுதியில் இருந்தும் உடனடியாக தகவல்களைப் பெற மற்றும் பகிர்ந்து கொள்ள ஹைபர்டெக்ஸ்ட் என்ற முதல் முயற்சி, W3 – world wide web என பரிமாற்றம் அடைந்தது.

1989-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி இணையத்தில் இந்த W3 இறங்கியது. சில ஆண்டுகளிலேயே இந்த W3 மிகப்பெரிய வளர்ச்சி கண்டது. உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் இதனை பயன்படுத்துகின்றனர்.இதை கண்டுபிடித்தவர் ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்த டிம் பர்னஸ் லீ என்னும் விஞ்ஞானி ஆவார்.

ஒட்டுமொத்த உலகத்தை ஒற்றை தளத்தில் இணைத்திருக்கும் WWW வேர்ல்ட் வைட் வெப் இன்றுதான் உருவாகப்பட்டது. இதற்காக கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.