Connect with us

முதல்வராக பொறுப்பேற்ற பின் மு.க.ஸ்டாலின் அவர்கள் கையெழுத்திட போகும் முதல் 3 கையெழுத்துக்கள்..?

Featured

முதல்வராக பொறுப்பேற்ற பின் மு.க.ஸ்டாலின் அவர்கள் கையெழுத்திட போகும் முதல் 3 கையெழுத்துக்கள்..?

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிக்கும் கடந்த மாதம் (ஏப்ரல்) 6- ல் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் இருந்தே திமுக முன்னிலை பெற்றது. தி.மு.க. கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெற்று வாகை சூடியது. தி.மு.க. மட்டும் 126 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தில் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலின் அவர்கள் கொரோனா காலத்தை மனதில் வைத்துபதவிப் பிரமாண நிகழ்ச்சியை எளிமையாக கவர்னர் மாளிகையில் நடத்த முடிவு செய்துள்ளோம். தேதியை இன்று அல்லது நாளை அறிவிப்பேன்” என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.அதன் படி சற்று முன் வெளியான தகவல் படி,மே 7 அன்று ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது.

இந்நிலையில் முதலமைச்சரான பிறகு ஸ்டாலின் 3 கையெழுத்துகளில் ஒன்றாக கொரோனா நிவாரண தொகையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ .4000 வழங்கும் கோப்பில் கையெழுத்திட உள்ளதாக உறுதிப்படாத தகவல் வெளியாகி உள்ளது.மேலும் பேருந்துகளில் மகளிர் இலவச பயணம்,குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு வேலையில் முன்னுரிமை போன்றவை வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Featured

To Top