Connect with us

தமிழ்நாட்டில் தியேட்டர்களில் மீண்டும் 100 % இருக்கைகளுக்கு அனுமதியா..?குதுகளத்தில் திரையுலகினர்

Cinema News

தமிழ்நாட்டில் தியேட்டர்களில் மீண்டும் 100 % இருக்கைகளுக்கு அனுமதியா..?குதுகளத்தில் திரையுலகினர்

கொரோனா பெருந்தோற்றால் மேலும் தமிழ்நாடு ,கர்நாடகாவில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு முன்னதாக அனுமதி கொடுக்கப்பட்டு இருந்தாலும் படத்தின் வசூல் அந்த அளவுக்கு ஹிட் அடிக்கவில்லை.சமீபத்தில் வெளியான சிவகுமாரின் சபதம், நோ டைம் டூ டை படங்களுக்கு கணிசமான அளவில் பார்வையாளர்கள் இருந்தனர்.அரண்மனை 3 படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவதால் இந்த வாரம் முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என திரையுலகத்தினர் எதிர்பார்த்தனர்.

ஆனால் தொடர்ந்து 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தீபாவளி முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.தீபாவளி சமயத்தில் புதிய படங்கள் வருகை அதிகமாக இருக்கும் அப்போது தியேட்டர்களுக்கு 100 சதவீத இருக்கைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் திரையுலகினரும் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

இப்படி இருக்கையில் இதற்கு முன்னதாக இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றால், யாரும் திரையரங்குகளுக்கு வர மாட்டார்கள், திரையரங்குகளை திறப்பது சாத்தியமில்லாமல் போய்விடும் என திரையரங்கு உரிமையாளர்களும், திரையுலகினரும் அதிருப்தி தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More in Cinema News

To Top