Connect with us

எவரெஸ்ட் நாயகன் ராஜசேகர் பச்சை நடிகர் அஜித்திடம் வாழ்த்து பெற்றார்..வைரலாகும் புகைப்படம் இதோ!

Cinema News

எவரெஸ்ட் நாயகன் ராஜசேகர் பச்சை நடிகர் அஜித்திடம் வாழ்த்து பெற்றார்..வைரலாகும் புகைப்படம் இதோ!

தமிழ்நாட்டின் சென்னையை ஒட்டியுள்ள மீனவ கடற்கரை கிராமம் கோவளம். அந்தப் பகுதியை சேர்ந்த இளைஞர் ராஜசேகர் பச்சை என்பவர் அலை சறுக்கு போட்டிகளில் சர்வதேச அளவில் பல வெற்றிகளைக் குவித்தவர்.

அலைச்சறுக்கு பயிற்சியாளராக இருந்து வந்த ராஜசேகருக்கு திடீரென மலையேற்றத்தில் ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக அதற்குரிய பயிற்சிகளைத் தொடங்கி, தொடர்ந்து மலையேற்றத்தில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தைப் பெற்றார்.

இதனையடுத்து ஒரு வருட காலம் மலையேற்றத்திற்கான பயிற்சிகளை எடுத்த அவர் ஆறு மலை உச்சிகளில் ஏறி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் கனவை நோக்கி நடை போட்டார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும்போது கடுமையான பனி குளிரை தாங்க வேண்டும் என்பதற்காக மணாலி, சோலாங், நேபாளம் உள்ளிட்ட பகுதிகளில் மாத கணக்கில் தங்கி உடலையும் மனதையும், குளிருக்கு தயார் செய்து, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு உறுதியோடு தயாரானார்.

அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி எவரெஸ்ட் அடிவாரத்தில் பயணத்தைத் தொடங்கிய ராஜசேகர் பச்சை 8,850 மீட்டர் உயரத்தை கடந்த மே மாதம் 19ஆம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் அடைந்தார். ஒரு மாதத்திற்கும் மேல் கடும் இன்னல்களை கடந்து எவரெஸ்ட்டில் ஏறி சாதனை படைத்தார்.

தமிழ்நாட்டில் இருந்து இரண்டாவது நபராக எவரெஸ்ட் உச்சியை எட்டியிருப்பவர் ராஜசேகர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016ஆம் ஆண்டு ஊட்டியை சேர்ந்த ராணுவ வீரர் சிவக்குமார் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் தமிழர் என்ற சாதனையை படைத்தார்.

இந்நிலையில் ராஜ்சேகர் பச்சை நடிகர் அஜிகுமாரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அஜித்துடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி படு ட்ரெண்டாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "சீயான் விக்ரம் நடிக்கும் சூர்யபுத்திரன் கர்ணன்! ஆனால் விக்ரமுக்கே தெரியாமல் வெளியான Teaser..!"

More in Cinema News

To Top