Connect with us

தமிழகத்தில் ஜூன் 28 -க்குப் பிறகு என்னென்னெ கட்டுப்பாடுகள்..?எதெற்கெல்லாம் தளர்வுகள்..?முதல்வர் ஆலோசனை

Featured

தமிழகத்தில் ஜூன் 28 -க்குப் பிறகு என்னென்னெ கட்டுப்பாடுகள்..?எதெற்கெல்லாம் தளர்வுகள்..?முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் தொற்று பரவல் அதிகரித்திருந்த நிலையில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி மே 24-ந் தேதியில் இருந்து 31-ந் தேதிவரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு படிப்படியாக ஒவ்வொரு வாரமாக நீட்டிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 5 முறை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் தொற்று பரவல் நன்றாக குறைந்து வருகிறது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு 28-ந் தேதி முடிகிறது.

இந்த நிலையில் 6-வது முறையாக ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதலாக என்னென்ன தளர்வுகள் வழங்கலாம்? என்பது தொடர்பாகவும் இன்று தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் கொரோனா தொற்று மிகவும் குறைந்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் பொதுப்போக்குவரத்து சேவைக்கு கடந்த 21 ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டது. இதனால், 4 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், இன்று முதல் சென்னை புறநகர் ரயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால், பிற மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் பொதுப் போக்குவரத்து எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Featured

To Top