Connect with us

தமிழ் ராக்கர்ஸ் என்றால் யார்?ரசிகர்கள் பாராட்டும் அளவிற்கு வெளியான ட்ரைலர்

Cinema News

தமிழ் ராக்கர்ஸ் என்றால் யார்?ரசிகர்கள் பாராட்டும் அளவிற்கு வெளியான ட்ரைலர்

கோலிவுட் தயாரிப்பாளர்கள் என அனைவருமே தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரைக் கேட்டாலே அலறுவார்கள். தமிழ் ராக்கர்ஸ் என்றால் யார்,அதில் எத்தனை பேர் என்று இன்றுவரை தெரியவில்லை.இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரில் ஈரம் படத்தின் இயக்குநர் அறிவழகம் வெப் சீரிஸ் இயக்கியுள்ளார். அருண் விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் இத்தொடரில், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம்பெருமாள் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏவிஎம் புரொடக்ஷன் இந்த வெப் சீரிஸை தயாரித்துள்ளது.

இந்த தொடரின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சற்று முன் இந்தத் தொடரின் டிரைலர்வெளியாகியுள்ளது. இரண்டு நிமிடங்களுக்கு மேல் இருக்கும் இந்த டிரெய்லரில் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் பிரபல நடிகரின் திரைப்படம் 10 நாட்களுக்கு முன்பே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

அருண்விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த வெப்தொடருக்கு விகாஸ் பாதிஷா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top