Connect with us

சக போட்டியாளர்களிடம் வெறுப்பை சம்பாதித்த பார்வதி …மூன்றாம் உலகத்துக்குள் போவாரா..?

Cinema News

சக போட்டியாளர்களிடம் வெறுப்பை சம்பாதித்த பார்வதி …மூன்றாம் உலகத்துக்குள் போவாரா..?

ஜீ தமிழ் சர்வைவர் நிகழ்ச்சியில் 15-வது நாள் எபிசோட் நேற்று பெரிய வித்தியாசத்தில் காடர்கள் வெற்றி பெற்றனர். தோல்வியடைந்த அணி ட்ரைபல் பஞ்சாயத்திற்கு வர வேண்டும் என வேடர்கள் அணியை அர்ஜூன் அழைத்தார். வெற்றி பெற்றதால் காடர்கள் அணிக்கு வாள் வழங்கப்பட்டது. பஞ்சாயத்திற்கு செல்ல வேண்டியதில்லை என்கிற நிம்மதியோடு காடர்கள் அணி தீவு பெரும் மூச்சு விட்டு அவர்களது குடிலுக்கு திரும்பினார்கள்.

அதன் பின் ட்ரைபல் பஞ்சாயத்துக்கு வந்த பார்வதி தீப்பந்தம் கொண்டுவந்து வைத்துவிட்டு, நான் தலைவியாக இருந்திருந்தால், பஞ்சாயத்துக்காகவே வந்திருக்க மாட்டோம் என சொல்ல , தன்னை மற்ற போட்டியாளர்கள் தனிமைப்படுத்தியதாகவும் சொல்லிக்கொண்டிருந்தார். பார்வதிக்கு எலிமினேட் வாக்கு கொடுக்க வேண்டாம் என நினைத்து வந்தவர்கள் கூட, ட்ரைபல் பஞ்சாயத்தில் பார்வதி பேசிய வார்த்தைகளால் முடிவை மாற்றிக்கொண்டு அவரை வெளியேற்றுவதற்காக ஓட்டு ஓலையை போட்டார்கள். பார்வதி மூன்றாம் உலகத்துக்கு செல்வாரா என்ற கேள்வியுடன் பஞ்சாயத்து முடிந்தது.

https://www.instagram.com/zeetamizh/?utm_source=ig_embed&ig_rid=f26afd4b-8f48-4ce7-9f22-2982202a0ad1

More in Cinema News

To Top