சூரியாவின் ‘வாடிவாசல்’ குறித்த வெளியான சூப்பர் மாஸ் அதிகாரப்பூர்வ அப்டேட்..!

0
44

ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே மற்றும் ட்ராப் சிட்டி என்னும் ஹாலிவுட் திரைப்படம் உட்பட பல படங்கள் பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளிவர காத்திருக்கிறது. இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு உருவான பிரபல இயக்குநர் வசந்தபாலனின் ‘ஜெயில்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க ஒப்பந்தமானார், அவருக்கு ஜோடியாக ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற அபர்ணதி நடிக்கிறார்.

கடந்த 2006ம் ஆண்டு வெளியான வெளியில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கிய இவர் 2015ம் ஆண்டு வெளியான டார்லிங் படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமானார். இந்த 2020ம் ஆண்டு இவர் நடிப்பில் 5-க்கும் அதிகமான படங்கள் வெளியாக காத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று ட்விட்டர் பக்கத்தில் சூர்யா -வெற்றிமாறனின் வாடிவாசல் திரைப்படத்திற்கான பாடல் வேலைகள் இன்று தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும் சூர்யா 40 மற்றும் மணிரத்னத்தின் நவராசா போன்ற படங்களில் சூர்யா நடித்து வருகிறார். வாடிவாசல் படம் ஒரு கில்லர் ஸ்கிரிப்ட் என ஜீவி இதற்கு முப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்பொழுது அவர் வெளியிட்ட தகவலின் படி வாடிவாசல் படத்தின் இசைப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதால், ‘வாடிவாசல்’ மிக விரைவில் தொடங்குவதற்கான பாதையில் உள்ளது,மேலும் அது குறித்த அதிகாரப்பூர்வ புதுப்பிப்பு மற்றும் மீதமுள்ள நடிகர்கள் மற்றும் குழு விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

https://twitter.com/gvprakash/status/1381865296084918272?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1381865296084918272%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiaglitz.com%2Fvaadivaasal-update-song-composition-by-gvp-started-vetrimaaran-kalaipulii-s-thanu-tamil-news-284437