Connect with us

“ரசிகரின் மரண செய்தி கேட்டு ஓடி வந்த நடிகர் சூர்யா…கண்கலங்க வைக்கும் புகைப்படங்கள்”

Cinema News

“ரசிகரின் மரண செய்தி கேட்டு ஓடி வந்த நடிகர் சூர்யா…கண்கலங்க வைக்கும் புகைப்படங்கள்”

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருபப்வர் தான் நடிகர் சூர்யா அவரின் ரசிகர்களால் நடிப்பின் நாயகன் என அன்பாக கொண்டாடப்பட்டு வருகிறார்.சினிமாவை கடந்து அகரம் என்னும் தொண்டு நிறுவனத்தின்மூலம் பல ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவியை வழங்கிவருகிறார் இதன் மூலம் நிறைய நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.

தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துவருகிறார்.இப்படம் அவரின் கேரியரில் மிக பெரிய படமாகும்,இந்த படத்திற்காக பெரிய அளவில் தந்து உடலை மாற்றி வருகிறார்.

நடிகர் சூர்யா தன்னை மட்டும் சேவையில் ஈடுபடுத்தாமல் தனது குடும்பத்தையும் சேவை செய்ய ஊக்கப்படுத்தியிருக்கிறார்.அந்த வகையில் சூர்யாவின் தம்பியும் நடிகருமான கார்த்தி உழவன் என்னும் தொண்டு நிறுவனத்தின்மூலம் விவசாயிகளுக்கு நல்லுத்தவைகள் செய்து வருகிறார்…இப்படி நிறைய நல்ல விஷயங்களை தொடர்ந்து இவர் செய்து வருகிறார் என்றே சொல்லலாம்…

நடிகர் சூர்யாவிற்கு ரசிகர் மன்றங்கள் நிறைய இருக்கிறது.தமிழ்நாடு மட்டுமில்லாமல் புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, கேரளா என நிறைய இடங்களில் இவரின் ரசிகர்களால் தொடங்கப்பட்ட மன்றங்கள் இருக்கிறது அவை எல்லாமே இப்போது நற்பணி மன்றங்கள் போல மாறி விட்டது.

இந்நிலையில் சென்னை எண்ணூர் பகுதியில் இருக்கும் அரவிந்த் என்னும் இளைஞர் சூர்யாவின் ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இருந்தார். இவர் சூர்யாவின் மிகப்பெரிய ரசிகராம்…சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார் அரவிந்த்…இதனால் அவரின் குடும்பமே வருத்தத்தில் மூழ்கியது.

இந்த தகவலை அறிந்ததும் நடிகர் சூர்யா இறந்த அவரின் ரசிகரும் ரசிகர் மன்ற உறுப்பினருமான அரவிந்த் வீட்டிற்கு சென்று அவரின் போட்டோவை வணங்கினார்..அதன் பின் குடும்பத்திற்கும் ஆறுதல் சொல்லிவிட்டு சென்றுள்ளார் இவர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "காலம் தான் அதை தீர்மானிக்கவேண்டும்! 2026 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடுவது குறித்து மெஸ்ஸி!"

More in Cinema News

To Top