Connect with us

நாட்டிற்காக தனது கடமையை தவறாமல் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..! குவியும் வாழ்த்துக்கள்..

Celebrities

நாட்டிற்காக தனது கடமையை தவறாமல் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..! குவியும் வாழ்த்துக்கள்..

பலநூறு ஆண்டுகளாக வெள்ளையர்களிடம் இருந்து நமது முன்னோர்கள் போராடி பெற்று தந்த சுதந்திரத்தை ஒவ்வரு வருடமும் கோலாகலமாக கொண்டாடி வருகிறரோம் .அந்தர்வாகியில் இந்த வருடம் ஸ்பெஷல் ஸ்பெஷல் தான்.

இந்த வருடம் நாம் 75-ஆவது சுதந்திர தின விழாவை ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் வகையில் ‘சுதந்திர தின அமிர்த பெருவிழா’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து செய்துகொண்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக ‘இல்லம் தோறும் தேசிய கொடி’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.

இந்நிலையில், வருகிற 13-ஆம் தேதி முதல் சுதந்திர தினமான 15-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு தங்கள் இல்லங்களில் மூவர்ண கொடியை கம்பீரமாக வானோக்கி பறக்கச் செய்யுமாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

PM Modi likens Congress protest to black magic: Won't help it regain trust  | India News,The Indian Express

இதற்கிடையே, கடந்த 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அனைத்து இந்தியர்களும் தங்களுடைய சமூக ஊடக கணக்குகளில் முகப்பு படமாக தேசிய கொடியை வைக்கவேண்டும் என்று பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

சொன்னது மட்டுமில்லாமல் தனது டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதள பக்கங்களின் முகப்பு படத்தில் தேசிய கொடியை உடனே அவரும் பதிவேற்றம் செய்தார். இதையடுத்து மத்திய அமைச்சர்கள் , அரசியல் தலைவர்கள் , திரை பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்கள் ஊடக பக்கங்களில் தேசிய கொடியை முகப்பு படமாக பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் முகப்பு படத்திற்கு பதிலாக மோடியின் அன்பு கட்டளையை ஏற்று தேசியக்கொடியை முகப்பு படமாக மாற்றியுள்ளார். அவரை பார்த்து அவரது ரசிகர்களும் மூவர்ண கொடியை முகப்பு படமாக மாற்றி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

To Top