Connect with us

வெற்றிமாறன் ஷூட்டிங்கில் விபத்து.. பிரபல சண்டை பயிற்சியாளர் மரணம்..?

Cinema News

வெற்றிமாறன் ஷூட்டிங்கில் விபத்து.. பிரபல சண்டை பயிற்சியாளர் மரணம்..?

வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட காலமாக எடுக்கப்பட்டு வரும் விடுதலை படத்தின் ஷூட்டிங்கின்போது ஏற்பட்ட விபத்தில், பிரபல சண்டை பயிற்சியாளர் சுரேஷ் உயிரிழந்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமா இயக்குனர்களில் தனக்கென ஒரு பாணியை கொண்டு முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் வெற்றி மாறன். இவர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு விடுதலை என்ற படத்தை எடுத்து வருகிறார்.

இந்தப் படத்தில், சூரி ஹீரோவாக நடிக்கும் நிலையில், விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கடந்த 2020ம் ஆண்டே இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், பின்னர் பல்வேறு காரணங்களால் படம் தாமதமாகி வந்தது. இதையடுத்து கதை விரிவாக்கம் செய்யப்பட்டு, விடுதலை இரண்டு பாகங்களாகத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டது.

இதன் பிறகு ஷூட்டிங் தீவிரப்படுத்தப்பட்டு, தற்போது முதல் பாகத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கான அனைத்து வேலைகளையும் முடித்து, முதல் பாகத்தை ஜனவரி 26 ஆம் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் இரண்டாம் பாகத்தையும் வெற்றி மாறன் விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை அருகே வண்டலூரில் விடுதலை படத்தின் ஷூட்டிங் நடந்தபோது, ரோப் கயிறு அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் விபத்தில் சிக்கி பிரபல சண்டை பயிற்சியாளர் சுரேஷ், படுகாயத்துடன் கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சுரேஷ் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விடுதலை படக்குழுவினர் விரைவில் விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "புயல் வெள்ளத்தில் தவிக்கும் 200 குடும்பங்களுக்கு நிதியுதவி செய்த KPY பாலா! தங்கமான மனுஷன் யா..!"

More in Cinema News

To Top