Connect with us

“இந்திய சினிமாவின் தந்தையின் வாழ்கை வரலாற்று படம்! Promo Video வெளியிட்ட இயக்குனர் ராஜமௌலி!”

Cinema News

“இந்திய சினிமாவின் தந்தையின் வாழ்கை வரலாற்று படம்! Promo Video வெளியிட்ட இயக்குனர் ராஜமௌலி!”

இந்திய சினிமாவின் தந்தை என புகழப்படும் தாதா சாகேப் பால்கேவின் வாழ்க்கை வரலாறு படமாகவிருக்கிறது. இந்தப் படத்தை நிதின் கக்கர் இயக்க வருண் தயாரிக்கிறார். படத்துக்கு மேட் இன் இந்தியா (Made in India) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரமாண்ட இயக்குநர் SS ராஜமௌலி வெளியிட்டிருக்கிறார்.

மேலும் அவர்தான் இந்தப் படத்தை வழங்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டிருக்கும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தக் கதையை முதன்முதலில் கேட்டபோது நான் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டேன். ஒரு வாழ்க்கை வரலாற்றை உருவாக்குவது ரொம்பவே கடினமானது. ஆனால் இந்திய சினிமாவின் தந்தையின் வாழ்க்கை வரலாற்றை கற்பனை செய்து பார்ப்பது இன்னும் சவாலானது. அதற்கு நமது ஆட்கள் தயாராக இருக்கிறார்கள்.

இது பெருமைப்பட வேண்டிய ஒரு வாழ்க்கை வரலாற்றை உருவாக்குவது கடினமானது, ஆனால் இந்திய சினிமாவின் தந்தையைப் பற்றி கற்பனை செய்வது இன்னும் சவாலானது. எங்கள் பையன்கள் அதற்கு தயாராக இருக்கிறார்கள். மேட் இன் இந்தியாவை வழங்குவதில் பெருமை கொள்கிறேன்” என்றார். இந்திய சினிமாவின் தந்தை என புகழப்படும் தாதா சாகேப் பால்கே முதன்முதலாக முழு நீள திரைப்படத்தை எடுத்தவர். ராஜ ஹரிசந்திராதான் அந்தப் படம்.

1913ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தில் நடிப்பதற்கு யாருமே முன்வரவில்லை. இதனையடுத்து தனது குடும்ப உறுப்பினர்களையே அந்தப் படத்தில் நடிக்க வைத்தார் அவர். அந்தப் படத்துக்கு பிறகு மோகினி பஸ்மஸுர், சத்யவான் சாவித்திரி உள்ளிட்ட படங்களை இயக்கினார். இவர் 1974ஆம் ஆண்டு உயிரிழந்தார். திரைத்துறையில் இவர் பெயரில் வழங்கப்படும் விருது உச்ச விருதாக கருதப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "3 மொழிகளில் உருவாகும் பிரபல Sci - Fiction படத்தின் இரண்டாம் பாகம்! Viral Pics!"

More in Cinema News

To Top