Connect with us

“900 கோடி வசூலை நெருங்கிய அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் வெளியான Jawan படம்!”

Cinema News

“900 கோடி வசூலை நெருங்கிய அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் வெளியான Jawan படம்!”

‘ஜவான்’ திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்தி சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் உலகம் முழுவதும் ரூ.129 கோடி வசூலித்துள்ளதாக ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இரண்டாவது நாளில் இப்படம் ரூ.240 கோடி வசூலித்தது.

மூன்றாவது நாள் படம் உலக அளவில் ரூ.ரூ.384.69 கோடி வசூலித்தது. 5 நாட்கள் முடிவில் ரூ.574.89 கோடியை வசூலித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் 12 நாட்களில் ரூ.883.68 கோடியை வசூலித்து மிரட்டி வருகிறது.

இந்தியில் மட்டும் படம் ரூ.430 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளது. பட்ஜெட்டை விட மூன்று மடங்கு லாபத்தை நெருங்கியுள்ள இப்படம் விரைவில் ரூ.1000 கோடியை வசூலிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஷாருக்கானின் ‘பதான்’ இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.1000 கோடியை வசூலித்து பாலிவுட்டை தோல்வியிலிருந்து மீட்டுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அப்படியே இந்தப் படமும் ரூ.1,000 கோடியை நெருங்கினால் ஒரே ஆண்டில் இரண்டு ரூ.1,000 கோடி வசூலை கொடுத்த நடிகர் என்ற பெருமையை ஷாருக்கான் பெறுவார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இந்த வாரம் OTT-யில் வெளியாக உள்ள படங்களின் பட்டியல்..Worth Weekend Guaranteed!

More in Cinema News

To Top