2வது போட்டியின் வெற்றிக்கு காரணம் இவர்தான்: கேப்டன் கோலி புகழாரம்!!

0
124

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலிய அணியுடனான இந்த வெற்றி குறித்து விராட் கோஹ்லி பேசியதாவது…

நான் மிகவும் இக்கட்டான நிலை இருந்த பொழுது களமிறங்கினேன், ஆகையால் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில்  இருந்தேன், எனக்கு வேறு வழியே கிடையாது என்பதை நானே உணர்ந்தேன். விஜய் சங்கரும் என்னுடன் சேர்ந்து மிக சிறப்பாக விளையாடினார்.

Vijay Shankar

ஒருநாள் போட்டிகளில் 250+ ரன்கள் இலக்கு என்பது மிக சுலபமானது தான் என்பதால் இந்த போட்டி கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பது நாங்கள் அறிந்ததே. பரபரப்பான கடைசி கட்டத்தில் என்ன முடிவு எடுப்பது, யாரை பந்துவீச சொல்வது என்பது குறித்து தோனி மற்றும் ரோஹித் சர்மாவிடம் ஆலோசித்து தான் ஒவ்வொன்றையும் செய்தேம்.

அவர்கள் போட்டியின் தன்மையை நன்கு உணர்ந்தவர்கள். விஜய் சங்கர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விட்டார், அதே போல் பும்ராஹ் மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோரும் தங்களது பங்களிப்பை மிக சரியாகவே செய்து கொடுத்தனர்.