காயம் காரணமாக விஜய் ஷங்கர் உலககோப்பை தொடரிலிருந்து விலகல்!!! மாற்று வீரர் யார் தெரியுமா??

0
131

தற்போதய உலககோப்பை தொடரை பொறுத்தவரையில் வீரர்கள் காயமாய் விலகுவது அதிகமாகிவிட்டது. முதலில் தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஸ்டைன் காயம் காரணமாக வெளியேறினார். அதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் ஷாஷாத் வெளியேற , அதன் பின் இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவானும் காயம் காரணமாக வெளியேறினார். தவனுக்கு பதிலாக அணியில் ரிஷாப் பந்த் அணியில் இடம் பெற்றார்.

தவான் காயம் காரணமாக அணியிலிருந்து விலகியபோது விஜய் ஷங்கருக்கு மண்ணில் வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்பளித்த அணைத்து போட்டிகளிலும் அவர் சரியாக விளையாடாததால் கடைசி போட்டியில் அவருக்கு பதிலாக பந்த் அணியில் இடம் பெற்றார். இந்நிலையில் தற்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விஜய் ஷங்கர் தற்போது உலககோப்பை தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மயங்க் அகர்வால் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக சேரப்பாக விளையாடியதும் குறிப்பிடத்தக்கது. எனவே நாளை நெடைபெற உள்ள போட்டில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் மற்றும் ஜடேஜா களமிறக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.