அப்போ கேதார் ஜாதவ் இப்போ விஜய் ஷங்கர் !!! அடுத்தடுத்து காயமாகும் இந்திய வீரர்கள்…

0
161

உலககோப்பை தொடருக்கான இந்தியா அணியை அறிவிப்பதில் பெரிய பிரச்சனையாக இருந்தது. இந்நிலையில் இறுதியில் அணியில் விஜய் ஷங்கர் மற்றும் தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அம்பதிக்கு ராயுடு மற்றும் ரிஷப் பந்த் க்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இது மட்டும்மல்லாமல் கேதார் ஜாதவ் ஐபில் தொடரில் காயமானதால் அவர் உலககோப்பை தொடரில் பங்கேற்பது சந்தேகமாக இருந்தது. அனால் அவர் விரைவில் குணமாகி அணியில் இணைந்துவிட்டார்.

இந்நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற பயிற்சியின் போது கலீல் அஹமது வீசிய பந்தில் அவரின் கையில் காயம் ஏற்பட்டது. எனவே இன்று நடைபெறும் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் இவருக்கு பதிலாக அம்பதியு ராயுடு அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.