ஐசிசி தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து அணியை முந்தி மீண்டும் முதலிடம் பிடித்த இந்திய அணி!!!

0
137
WELLINGTON, NEW ZEALAND - FEBRUARY 03: Kedar Jadhav of India celebrates with Shikhar Dhawan after taking the wicket of Kane Williamson of New Zealand during game five in the One Day International series between New Zealand and India at Westpac Stadium on February 03, 2019 in Wellington, New Zealand. (Photo by Hagen Hopkins/Getty Images)

ஐசிசி வெளியிட்டிருந்த தரவரிசையில் படி இந்திய அணி கடந்த ஒரு ஆண்டுகளாக இரண்டாம் இடத்திலேயே நீடித்தது. முதல் இடத்தில இங்கிலாந்து அணி அப்போது அனைத்து தொடர்களையும் வென்று முதல் இடத்தை வேறு எந்த அணிகளும் தொடமுடியாத அளவுக்கு தன்வசமாகியது.

அப்போது இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியிடம் ஒருநாள் தொடரை இழந்ததால் முதலிடத்தை பிடிக்கமுடியாமல் போனது. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் உலககோப்பை தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் 5 போட்டிகளில் 4 வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் இங்கிலாந்து அணியானது பாக்கிஸ்தான், இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடன் தோல்வியை தழுவியதால் அந்த அணி தற்போது 122 புள்ளிகளுடன் ஒருநாள் தரவரிசை பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்திய அணி 123 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்து அசத்தியது.அதுமட்டுமின்றி இந்திய அணி ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளிலும் முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.