உலக கோப்பையை வெல்ல இந்திய கேப்டன் கோலிக்கு தோனியின் உதவி தேவை சங்ககாரா பேட்டி!!

0
236

உலகக் கோப்பை தொடரில் தோனியின் இருந்தால் மதிப்பிட முடியாத அளவுக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் கோலிக்கு தோனியின் உதவி தேவை என்றும் கோலிக்கு தோனியின் உதவி தேவை என்றும் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு உலகக்கோப்பையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தோனி, ரிஷப் பன்ட், தினேஷ் கார்திக் ஆகியோரில் யார் இடம் பிடிப்பார் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது. விக்கெட் கீப்பிங்கில் தோனியை போல யாரும் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் பேட்டிங்கில் தினேஷ் கார்த்திக்கும், பன்ட்டும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.


இருந்தும் இந்திய தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் இதுகுறித்து பேசும் போது தோனிக்கு நிச்சயம் உலக கோப்பையில் இடம் இருக்கும் என்பது போலதான் பேசி உள்ளார். இந்நிலையில் இந்திய அணியில் தோனி நிச்சயம் இருக்க வேண்டும் என்று இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.
அவர் பேசும் போது, “உலகக் கோப்பையை பொறுத்தவரை அனுபவமே முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே தோனி இந்தியஅணியில் நிச்சயம் இடம் பிடிப்பார் என்று நினைக்கிறேன் .மேலும் கோலிக்கும் தோனியின் உதவி தேவைப்படும். தொடரின் போது இக்கட்டான சூழ்நிலைகளை சமாளிக்க கேப்டனுக்கு தோனி உறுதுணையாக இருப்பார்” என தெரிவித்துள்ளார்.