அவன் ஒன்னும் ரிஷப் பன்ட் கிடையாது!! தமிழக வீரரை ஏலனம் செய்யும் முன்னால் மும்பை வீரர் மஞ்சரேக்கர்!

0
215

கடந்த சனிக்கிழமை அன்று மும்பை இந்தியன்ஸ்,சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான நடைபெற்ற போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெறும் 96 ரன்களுக்குகே ஆல் அவுட் ஆனது.அந்த அணியில் ஒருவர் கூட 20 ரன்களுக்கு மேல் எடுக்கவில்லை.

ஹைதராபாத் அணியில் இடம் பெற்ற விஜய் சங்கர் தற்போதெல்லாம் அதிரடியாக விளையாடுகிறார்.அதே சமயம் விரைவாக தனது விக்கெட்டையும் பறிகொடுத்து விடுகிறார்.

இந்நிலையில், விஜய் சங்கருக்கு முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் ஆலோசனை வழங்கி இருக்கிறார். இதுகுறித்து அவர் டிவிட்டரில் கூறியுள்ளதாவது:-

‘விஜய் சங்கர் அதிரடியாக விளையாடக்கூடியவர் தான். ஆனால் எல்லா பந்துகளையும் அடித்த ஆட அவர் ஒன்றும் ரிஷப் பன்ட் இல்லை. களத்தில் உள்ள சூழ்நிலையை உணர்ந்து விஜய் சங்கர் ஆட வேண்டும். அது எப்படி என்பதை கோலியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று அறிவுரை கூறியுள்ளார்.