தோனியின் ஓய்வு குறித்து புதிய ட்வீட் செய்த அவரது மனைவி!

0
136

தோனியின்  ஒய்வு குறித்து அவரது மனைவி சாக்சி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடர் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் ,நட்சத்திர வீரருமான தோனி அணியில் சேர்க்கப்படவில்லை.

இதனையடுத்து இன்று ஒரு செய்தி அதிகமாக உலா வந்தது.அதாவது தோனி இன்று இரவு செய்தியாளர்களை சந்திக்கிறார்.அதில் தனது ஒய்வு முடிவை அறிவிக்கிறார் என்று தகவல் வெளியானது.இதனை தொடர்ந்து இந்த செய்தி வெளியான நிலையில் இது குறித்து இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் விளக்கம் அளித்தார்.அவரது விளக்கத்தில் தோனி ஒய்வு குறித்து வெளியான செய்திகள் அனைத்தும் பொய் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் தோனியின்  ஒய்வு குறித்து அவரது மனைவி சாக்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,அதெல்லாம் வதந்தி என்று பதிவிட்டுள்ளார்.


https://twitter.com/SaakshiSRawat/status/1172125156166135809?s=20