தோனி, கோஹ்லி, ரோஹித் க்கு சச்சின் டிப்ஸ்!!

0
120

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஐபிஎல்எல் தொடர்கள் என தொடர்ந்து ஓய்வில்லாத விளையாடி வரும் இந்திய வீரர்கள், உலக கோப்பைக்கு செல்லும்பொழுது சீரான மனநிலையில் இருப்பது கட்டாயமான ஒன்று.

மேலும் தங்களை காயப்படாமல் பார்த்துக் கொள்வதும் இன்றியமையாத ஒன்று.

இதனால் அவ்வபோது கிடைக்கும் போட்டிகளில் ஓய்வு எடுத்துக்கொண்டு, உலக கோப்பைக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளுமாறு சச்சின் கோரியுள்ளார்.

அவர் கூறுகையில் “தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஐபிஎல் போட்டிகளில் அதிகப்படியான பொறுப்புகளை வகித்து வருகின்றனர். அவர்களுக்கு கேப்டன் பொறுப்பு இருப்பதால் அணியில் கூடுதல் கவனத்துடன் இருப்பர். ஆரோக்கியமான மனநிலை அவர்கள் மேற்கொள்வது சற்று கடினமான விஷயம். ஆனால் வருகின்ற உலக கோப்பைக்கு அவர்களது பங்களிப்பு நிச்சயம் தேவை. எனவே கிடைக்கும் நேரங்களில் ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது” என அறிவுரை கூறினார் சச்சின்.