இவரை துவக்க ஆட்டக்காரராக களமிறக்குங்கள்! கங்குலி அட்வைஸ்

0
24

தொடக்க ஆட்டக்காரராக ரோகித் கண்டிப்பாக களமிறக்கப்பட வேண்டும் என்று சவுரவ் கங்குலி  தெரிவித்துள்ளார்.

இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சமீபத்தில் டெஸ்ட் தொடரில் விளையாடியது.இந்த தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.ஆனாலும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.தொடக்க வீரரான ராகுல் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.ஆனால் அகர்வால் மட்டுமே ஓரளவு விளையாடினர்.ஆனால் நட்சத்திர வீரரான ரோகித்துக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் குறித்து முன்னாள் நட்சத்திர வீரர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,   உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா டெஸ்டிலும் சிறப்பாக விளையாட  காத்திருக்கிறார்.நான் ஏற்கனவே சொல்லியதுபோல ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் . மிடில் ஆர்டரில் விஹாரி மற்றும் ரஹானே சிறப்பாக உள்ளதால் தொடக்க ஆட்டக்காரராக ரோகித் கண்டிப்பாக  களமிறக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here