சாதனைமேல் சாதனை படைக்கும் ரோகித் ஷர்மா!!!

0
162

இந்தியாவின் துவக்க ஆட்டக்காரரான ரோகித் ஷர்மா இரட்டை சதத்திற்க்கு பேர்போனவர். இதுவரை ஒருநாள் போட்டியில் மூன்றுமுறை இரட்டை சதமடித்து அசத்தியுள்ளார். அதிலும் ஒருமுறை 264 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் மற்றுமொரு சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் ரோகித் ஷர்மா.

நேற்றை தினத்தில் அவர் தனது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 8000 ரன்களை கடந்தார். இதன்மூலம் அதிவேகமாக 8000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவர் 200 இன்னிங்ஸ்ல் 8000 ரன்களை கடந்துள்ளார். இவருக்கு முன் விராத் கோலி 175 இன்னிங்ஸ், டிவில்லியர்ஸ் 182 இன்னிங்ஸ்லும் 8000 ரன்னை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி 8000 ரன்களை வேகமாக கடந்த துவக்க ஆட்டக்காரர் என்ற சாதனையும் படைத்துள்ளார் இவர்.

துவக்க வீரராக மட்டும் இவர் 6000 ரன்களை கடந்துள்ளார். அதிவேகமாக 6000 ரன்களை கடந்த துவக்க வீரர் என்ற சாதனையும் தன்வசமாக்கினார் ரோகித் ஷர்மா.