உங்களின் ஒரு முடிவு எங்களை வேலையில்லாதவனாக மாற்றிவிடுகிறது!!! ஜிம்பாவே அணி கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்டதற்கு முன்னணி வீரர் கருத்து..

0
108

கிரிக்கெட்டை பொறுத்தவரில் 10 அணிகள் தான் அதிக ஆர்வம் காட்டி விளையாடி வருகின்றன. அதுபோக ஜிம்பாவே, அயர்லாந்து, நெதர்லாந்து, கென்யா, நேபாளம் என பல அணிகள் இதில் முன்னணி அணியாக மாறுவதற்கு போராடி வருகின்றன. அந்த வகையில் பல ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் நாம் பார்த்திருக்கும் அணி ஜிம்பாவே. ஆனால் சமீபத்தில் அந்நாட்டு நிர்வாகத்துக்கும் ஐசிசி-க்கும் இடையேயான கருத்து மோதலால் அந்த அணியை சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை தடை செய்தது ஐசிசி .

இந்நிலையில் இது குறித்து பல வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தற்போதைய ஜிம்பாவே அணியின் புகழ்பெற்ற வீரரான ராசா மிகவும் கண்கலங்கிய வண்ணம் தனது கருத்தினை த்விட்டேர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் உங்களின் ஒரு முடிவு என்னை போன்ற பலரை வேலையில்லாதவனாக மாற்றி விட்டது. இது பல குடும்பங்களை பாதித்து விட்டது. இந்த முடிவு பலரின் வாழ்க்கையை முடித்து விட்டது. அதில் நானும் ஒருவன் என பதிவிட்டிருந்தார். இதனை கண்ட பல முன்னணி வீரர்கள் அவர்க்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.