பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!!

0
177

ஐபிஎல் 2019 தொடரின் 4வது போட்டியில், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதி வருகின்றன.

முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச முடிவு செய்தது.

துவக்க வீரர்கள் ராகுல் மற்றும் கெயில் இருவரும் களம் கண்டு துவங்கினர். ராகுல் 4 ரன்களில் அவுட் ஆனார். அதிரடி காட்டிய கெயில் 79 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டறிகளும் 4 சிக்ஸரும் அடங்கும்.

மயங்க் அகர்வால் 22 ரங்களும் மற்றும் நிக்கோலஸ் பூரன் 12 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர்.

சிறப்பாக ஆடிய சர்ப்பிரஸ் அஹ்மது 29 பந்துகளில் 46 ரன்கள் அடித்து அசத்தினார். 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது பஞ்சாப் அணி.

ராஜஸ்தான் சார்பில் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகள், குல்கர்னி மற்றும் கௌதம் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.

185 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய ராஜஸ்தான் அணி, ரஹானே மற்றும் பட்லர் சிறப்பாக ஆடினர். ரஹானே 27 ரன்களுக்கு வெளியேறினார். பட்லர் 69 ரன்களுக்கு சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற 20 ஓவர் முடிவில் 170 ரன்கள் மட்டுமே எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது ராஜஸ்தான்.